நிலாவுக்கு டூர் போலாமா.. நிலவில் ஸ்டே பண்ண அமெரிக்க நிறுவனம் போட்ட மெகா பிளான்..

“நிலா நீல வானில் ஓடுதே… நம்மைப் பார்த்து ஜாடைகள் பேசுதே” – என்ற பாடல் வரிகளை இனி நிஜமாக்கப் போகிறது அமெரிக்காவின் GRU Space நிறுவனம். உலகிலேயே முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் ஒரு பிரம்மாண்ட சொகுசு ஹோட்டலை அமைக்கும் பணிகளில் அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.

2029-ல் தொடங்கும் வேலை!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த விண்வெளி நிறுவனம், வரும் 2029-ம் ஆண்டில் நிலவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி, 2032-க்குள் ஹோட்டலை முழுமையாகக் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காகப் பூமியில் இருந்து சிமெண்ட், செங்கல் கொண்டு போகாமல், நிலவில் உள்ள மண்ணையே கட்டுமானப் பொருட்களாக மாற்றும் நவீன ‘3D Printing’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.

ஒரு நைட்டுக்கு ₹3.8 கோடியா?
இந்த ஹோட்டலில் தங்குவதற்கான கட்டணம் தான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக். ஒரு இரவு தங்கி நிலவின் அழகை ரசிக்க சுமார் 3.8 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்சங்கள்:
இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்குப் பூமியின் அழகை நிலவில் இருந்து பார்க்கும் வசதி, ஸ்பேஸ் வாக் (Space Walk) மற்றும் விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் ஜாலியாகப் பறக்கும் வசதிகள் எனப் பல ‘வேற லெவல்’ அனுபவங்கள் காத்திருக்கின்றன.

யாருக்கெல்லாம் வாய்ப்பு?:
ஆரம்பத்தில் இது கோடீஸ்வரர்களுக்கான ‘லக்சுரி’ டூராகத் தெரிந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் இது சகஜமான ஒன்றாக மாறும் என்கிறது அந்த நிறுவனம்.

90s கிட்ஸின் கனவு நனவாகுது!
சிறு வயதில் சோறு ஊட்டும் போது நிலாவைக் காட்டிய அம்மாக்களிடம், “நான் நிலாவுக்கே போவேன்” என்று சொன்ன 90s மற்றும் 2k கிட்ஸின் கனவு, இன்னும் சில ஆண்டுகளில் நிஜமாகப் போகிறது. “ஹனிமூனுக்கு நிலவுக்கே போலாம்” என்று இப்போதே சிலர் பிளான் போடத் தொடங்கிவிட்டனர்.

இருந்தாலும், “₹3.8 கோடி இருந்தா இங்கேயே ஒரு சின்னத் தீவையே வாங்கிடலாமே!” என்று வழக்கம் போல ஒரு தரப்பு கலாய்த்தும் வருகிறது.

Leave a Comment