எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதற்கு உகந்த தொகுதிகள் குறித்து அக்கட்சியின் வியூக வகுப்பாளர்கள் நடத்திய ரகசியக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, விஜய் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் எனக் கணிக்கப்பட்ட முக்கிய மூன்று தொகுதிகளைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் டாப் 3 வெற்றித் தொகுதிகள்:
தற்போது திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் வசம் உள்ள இந்தக் தொகுதிகளை விஜய் குறிவைக்க முக்கியக் காரணம், இங்குள்ள சிறுபான்மை வாக்குகளின் ஆதிக்கம்தான் என்று கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு-இனிகோ இருதயராஜ் (திமுக)சிறுபான்மை வாக்குகள் அதிகம். விஜய்யின் பிரச்சாரத் தொடக்கம் இங்குதான் அமைந்தது.
மதுரை மேற்கு –செல்லூர்-ராஜு (அதிமுக) சிறுபான்மை வாக்குகள் அதிகம். திருவாடானை– எம்.எஸ். கருமாணிக்கம் (காங்கிரஸ்)சிறுபான்மை வாக்குகள் அதிகம்.
விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையைத் திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட் மரக்கடையில் தொடங்கினார். இந்தப் பகுதி திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குள்தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது, அவர் இந்தக் தொகுதியை மனதில்கொண்டுதான் தனது பிரசாரத்தைத் தொடங்கினாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த மூன்று தொகுதிகளும் தமிழகத்தின் தென் மண்டலத்திலும், மத்திய மண்டலத்திலும் அமைந்துள்ளன. திராவிடக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களை எதிர்த்துப் போட்டியிடும் வகையில் இந்த வியூகத் தேர்வு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.