கரூர் தூயர சம்பவத்தால் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். தனது தேர்தல் பரப்புரையின் போது இது போன்ற ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டதால் தற்காலிகமாக தனது தேர்தல் பரப்புரையை விஜய் நிறுத்தி வைத்திருந்தார். கரூர் துயர சம்பத்தால் இறந்த குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் பணமும் அவர்களை சென்னைக்கு வரவழைத்து ஆறுதலும் கூறினார்.
அதன் பிறகு சென்னையில் தவெக கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, என்னுடைய அரசியல் பயணம் இன்னும் வேகமாக செயல்படும் என்று விஜய் கூறியிருந்தார். மீண்டும் மக்கள் சந்திப்புக்கு ஆயத்தமான விஜய் டிசம்பர்-4 முதல் தனது தேர்தல் பரப்புரையை சேலத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளதாக தவெக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை 23.11.2025 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என்று 2000 பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டுமென்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மக்களின் வேண்டுதலுக்காக தான் இந்த சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் விரும்பும் முதலமைச்சர் விஜய் நாளை காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்க உள்ளதாகவும் இதன் சந்திப்பு காலை 11 மணியளவில் நடைபெறும் என்றும் இதில் சுமார் 2000 பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்காக QR கூடிய நுழைவுச்சீட்டை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதை வைத்துள்ளவர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள், வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். இந்த சந்திப்புக்கு பொதுமக்களும், தோழர்களும் கண்டிப்பாக ஒத்துழைப்பு தர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.