குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்.. விஜயால் விழி பிதுங்கும் ஸ்டாலின்..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலம் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சியான திமுக தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க வேண்டும் இன்னும் தீவிரமாக இருக்கிறது. அதே சமயத்தில் கடந்த முறை தோற்றுப் போன இடங்களில் இம்முறை வெல்ல இன்னும் மும்முறமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக தற்போது மாற்றுத்தலைவர்களை ஏற்பாடு செய்து அதே தொகுதியில் வெற்றி பெற இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மறுபுறத்தில் திமுகவை தொடர்ந்து அதிமுக எதிர்த்து வருகிறது. இவர்களுடன் கூடுதல் அடிஷனாக தமிழக வெற்றிக்கழகமும் தனது அரசியல் எதிரி திமுக தான் என்று விஜய் கட்சி ஆரம்பித்த அன்றிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

விஜய்க்கு கூடி வரும் கூட்டத்தைப் பார்த்த திமுக கூட்டணி கட்சிகள் தங்களுக்கு இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டுமென்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தவெக உடன் கூட்டணி சென்று விடுவோம் என்று மறைமுகமாக கூறிவந்தன.

சமீபத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக மீது கடும் விமர்சனம் வைத்தார் டாஸ்மார்க் ஒழிக்க வேண்டும், ஜாதி சண்டைகளை திமுக ஊக்குவிக்கிறது என்று அவர்களுக்கு எதிரான கருத்தை பரப்பி வந்தார். இவ்வளவு நாள் அமைதியாக இருந்த வைகோ தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு எதிராக திரும்பியதற்கு காரணம் விஜய் தான் என்று திமுக வட்டாரங்கள் குறிப்பிடுகிறது.

இன்றைய தேதியில் திமுகவை எதிர்க்க திராணியுள்ள ஒரே மனிதர் விஜய் தான் என்றும் அவருக்கு வரும் கூட்டங்களை பார்த்து மிரண்டு போன மற்ற கட்சிகள் இவரை எப்படியாவது தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக திமுக விற்கு எதிரான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் இதை கண்ட ஸ்டாலின் செய்வதறியாது திணறி வருவதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment