TVK: எனக்காடா எண்ட் கார்ட் போடுறீங்க!.. மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்!…

தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் தோற்கடிக்க வேண்டும் என்பதை அவரின் எண்ணமாக இருக்கிறது. எப்படியாவது மக்களின் ஆதரவை பெற்ற விட வேண்டும் என நினைத்த விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களும் சென்று சுமார் 20 நிமிடங்கள் வரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பின் அவர் கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு ஏற்பட்ட அசம்பாவிதத்தால் 41 பேர் வரை உயிரிழந்தனர்.

இதற்கு விஜய்தான் முழு காரணம், தவெக நிர்வாகிகள் சரியான ஏற்பாட்டை செய்யவில்லை. விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்ததால் மக்கள் வெயிலில் காத்திருந்து சோர்வடைந்துவிட்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற ஏற்பாடுகளை தவெகவினர் செய்யவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் அங்கு மரணம் நேர்ந்தது என விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினரும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஒருபக்கம் சென்னை உயர் நீதிமன்றமும் விஜய் மற்றும் தவெகவினரை விமர்சனம் செய்தது.

அதன்பின் கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கேட்டு தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உச்சநீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் ஒரு மாத காலம் தவெக இயங்கவில்லை. விஜயும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

tvk vijay

ஒருபக்கம் தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை என்கிற விமர்சனமும் இருந்தது. ஆனால் விஜய் மீண்டும் கரூருக்கு செல்வதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு வரவழைத்து நேரில் ஆறுதல் சொன்னார். அதன்பின் கட்சி பணிகள் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது.

இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பதால் விஜய் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க வேண்டும், மீண்டும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என தவெக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் தலைமையிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதை விஜயும் ஏற்றுக்கொண்டார்.

எனவே டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தவெக தலைவர் விஜய் மீண்டும் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். விஜயின் பிரசாத்திற்கு அனுமதி கோரி சேலம் மாநகர காவல்துறை ஆணையரகத்தில் தவெக சார்பில் மனுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் மீண்டும் களமிறங்கினால் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment