இளம் கன்று பயம் அறியாது.. UAE அணியின் பந்துவீச்சை சிதறடித்த வைபவ் சூர்யவன்ஷி மிரட்டல் சதம்..

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிராக நடைபெற்ற அண்டர் 19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

யுஏஇ அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த சூரியவன்ஷி, வெறும் 95 பந்துகளில் 171 ரன்களை விளாசி, இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்ட உதவினார்.

சிக்ஸர் மழை பொழிந்த இளம் புயல் : 

வைபவ் சூரியவன்ஷியின் ஆட்டத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மழை பொழிந்தது. அவரது 171 ரன்கள் இன்னிங்ஸில், பவுண்டரிகள்: 9, சிக்ஸர்கள்: 14 அடங்கும். இதன் மூலம், ரசிகர்களுக்கு அவர் ஒரு முழுமையான விருந்தளித்தார். இறுதியில், அவர் உத்திஷ் சூரி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

சூரியவன்ஷியின் இந்த மின்னல் வேக ஆட்டம், அண்டர் 19 ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியதோடு, இளம் வீரர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Comment