ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் 5G இன்டர்நெட் சேவையை இன்று நாடு முழுவதும் வழங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் 5g அன்லிமிடெட் சேவையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. பின்னர் சேவைகள் வட மாநிலங்களில் மட்டும் தொடங்கப்பட்டது.
அதன்படி மும்பை, பாட்னா, சண்டிகர் ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி அன்லிமிடெட் சேவை தொடங்கப்பட்டது. ஐபிஎல் போட்டியின் போது சென்னை பெங்களூரு, ஹைதராபாத் என விளையாட்டு மைதானத்தை சுற்றி நெட்வொர்க் சேவையை வழங்கியது vi நிறுவனம்.

தற்போது இரண்டாம் கட்டமாக பெங்களூருவில் முழுவதுமாக அன்லிமிடெட் 5 ஜி டேட்டா சேவையை வழங்குவதற்கான திட்டங்களை வெளியிட்டு இருக்கிறது vi.
அதன்படி வட மாநிலங்களில் கொடுக்கப்பட்ட அதே விலைக்கு ரூ 299 திட்டத்திலே இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இது 28 நாட்கள் வேலிடியுடன் 5g அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படும். அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு 1gb டேட்டா பயன்படுத்தலாம். அன்லிமிடெட் லோக்கல் கால்ஸ், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்கிறது. வேறு எதுவும் இந்த திட்டத்தில் இடம் பெறாது.