விஜய் அணியின் புதிய அடையாளம்.. சின்னத்தை தேர்வு செய்த தேர்தல் ஆணையம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.), எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘மோதிரம்’ (Ring) சின்னத்தை ஒதுக்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்டோ கிடைக்காததால் மோதிரம் :

த.வெ.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டபோது, அவர்கள் கோரிய சின்னங்களின் பட்டியலில் ‘ஆட்டோ’ சின்னமும் இடம்பெற்றிருந்தது.

ஆட்டோ மறுப்பு:

ஆனால், ‘ஆட்டோ’ சின்னம் ஏற்கனவே கேரளாவில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், த.வெ.க.வுக்கு அந்த சின்னம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மோதிரம் ஒதுக்கீடு:

இதைத் தொடர்ந்து, யாரும் பெரிதும் எதிர்பார்க்காத வகையில், தேர்தல் ஆணையம் த.வெ.க.வுக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் :
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.வெ.க. தனது முதல் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த ‘மோதிரம்’ சின்னம் தொண்டர்கள் மத்தியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment