12 வருஷம் மத்தியில எதிர்க்கட்சியா கெத்து காட்டுனீங்க.. இப்ப கடைசி நேரத்துல பாஜகவோட சேர்ந்தா எப்படி? ஒருவேளை 2029ல் பாஜக தோத்து, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு அதில் தவெகவும் பங்கு பெற்றால் உங்க நிலைமை என்ன ஆகும்ன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. திமுகவுக்கு அறிவுரை கூறும் அரசியல் விமர்சகர்கள்…

தமிழ்நாட்டு அரசியல்ல இப்போ நடக்குற கூத்தை பார்த்தா சிரிக்கிறதா இல்லை பரிதாபப்படுறதானே தெரியல! முதல்வர் விஜய் ஆட்சியைப் பிடிச்சதுல இருந்தே சும்மா நெருப்பா வேலை செஞ்சிட்டு இருக்காரு. உதயநிதி கைதுக்கு அப்புறம் திமுக தலைவருக்குக் கை கால் ஓடல. ஊழல் கேஸுல இருந்து தப்பிக்கவும், முதல் குடும்பத்தைக் காப்பாத்திக்கவும் டெல்லி பாஜக கால்ல போய்ப் விழ பிளான் போடுறாங்க. ஆனா, இந்த அவசர முடிவு திமுகவுக்குத் தானே வச்ச பெரிய ஆப்பா முடியப்போகுதுன்னு அரசியல் விமர்சகர்கள் கதறுறாங்க!

கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா உங்களுக்கே புரியும். வர்ற 2029 எலக்‌ஷன்ல பாஜக ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைங்கிறதுதான் நிதர்சனம். நாடு முழுக்க ஆட்சி எதிர்ப்பு அலை வீசுது, விலைவாசி உயர்வுன்னு ஜனங்க கடுப்புல இருக்காங்க. இப்போ போய் சரிஞ்சு விழப்போற பாஜக கப்பல்ல திமுக ஏறுனா, நடு கடல்ல முங்கி சாக வேண்டியதுதான். உட்கார்ந்திருக்க கிளையைத் தானே வெட்டிக்கிற கதையா இருக்கு இவங்க பண்ற வேலை!

இன்னொரு பக்கம், தேசிய அரசியல்ல புது காத்து வீசத் தொடங்கிடுச்சு. காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி செம கெத்தா உருவெடுத்துட்டு வருது. சமாஜ்வாதி, ஜேடியூன்னு பல மாநிலக் கட்சிகளோட சேர்ந்து, கரப்பான் பூச்சியும் கூட்டணி சேர வாய்ப்பு உண்டு. அதோட தமிழ்நாட்டோட அசைக்க முடியாத மாஸ் சக்தியா திகழுற விஜய்யோட தவெகவும் இந்தியா கூட்டணியில கை கோர்த்தா, 2029-ல பாஜகவை தடம் தெரியாம தூக்குறது உறுதி. இந்த மாஸ் கணக்கைப் புரிஞ்சுக்காம, திமுக உடனடி சுயநலத்துக்காக பாஜக பக்கம் பாயுறது அவங்களோட சொந்தச் செலவுல சூனியம் வச்சுக்கிற மாதிரி.

கிட்டத்தட்ட 12 வருஷமா மத்தியில எதிர்க்கட்சியா முடங்கிக் கிடந்த திமுக, இப்போ பண்ண போற இந்த தவறான காரியத்தால, 2029-க்குப் பிறகும் அங்கேயும் இல்லாம இங்கேயும் இல்லாம நடுத்தெருவுலதான் நிற்கப்போகுது. “பாசிச பாஜக”ன்னு கூவிக்கிட்டே இப்போ அவங்க கால்ல போய் விழுந்தா, இத்தனை நாளா சொன்ன கொள்கையெல்லாம் வெறும் போலி டிராமான்னு ஊருக்கே தெரிஞ்சிடும். கட்சி தொண்டன்கூட அப்புறம் மதிக்க மாட்டான்.

தமிழ்நாட்டுல முதலமைச்சர் விஜய் தவெக ஆட்சியோட மாஸ் காட்டிட்டு இருக்காரு. இதே கெத்தோட 2029-ல மத்திய அரசிலும் தவெக பங்கு வகிச்சா, அப்புறம் திமுகவை எந்தக் கொம்பனாலும் காப்பாத்த முடியாது. ஸ்டேட்லயும் விஜய் ஆட்சி, சென்ட்ரல்லயும் தவெக அதிகாரம்னு வந்தா, திமுக பண்ணின அத்தனை அக்கிரமத்துக்கும் சட்டப்படி சரியான ஆப்பு காத்திருக்கு.

இவ்வளவு காலம் கூட இருந்த ‘இந்தியா’ கூட்டணியை விட்டுட்டு திமுக வெளியேறுறது, அவங்களாவே தலையை எடுத்துட்டு போய்க் கோடாரியில வைக்கிற ‘அரசியல் தற்கொலை’க்குச் சமம்! தற்காலிகப் பாதுகாப்புக்காக எதிரிகிட்ட சரணடையப் பாக்குற இந்தத் கேவலமான வியூகம், 2029 எலக்‌ஷன்ல திமுகவோட கதையை ஒட்டுமொத்தமா முடிச்சுடும்னு அரசியல் வல்லுநர்கள் அடிச்சுச் சொல்றாங்க!

Leave a Comment