கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான சண்டை மட்டும் ஓயவே ஓயாது போல. ஒவ்வொருவரின் வித்தியாசமான சண்டையை கேட்கும் போது இப்படிலாம் எப்படி தான் சண்டை வருது என யோசிக்க தோணும். அந்த வகையில் தற்போது இன்னும் சண்டை குறித்த நிகழ்வும் வெளியாகி இருக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம் பால்கர் மாவட்டத்தினை சேர்ந்த சிஸ்னே கிராமத்தில் 23 வயதான பழங்குடி பெண் தன் கணவன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர் கணவர் ஒரு மீனவர் என்பதால் அடிக்கடி வெளியில் செல்வது வழக்கமாம். அதுப்போல ஞாயிற்றுக்கிழமை கணவர் நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டாராம்.
தன்னை அழைத்து செல்லாமல் போன கணவர் மீது அப்பெண்ணுக்கு கடும் கோபம் வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் தன்னுடைய புத்தியை இழந்தவர். மகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவ்வீட்டின் அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்த நிலையில் அப்பெண் மற்றும் மகளின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இக்கொலை குறித்த விசாரணையும் தொடங்கி நடந்து வருகிறது.