தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு 2026 சட்டமன்ற தேர்தல் களம் ஒரு குடும்ப போராட்டமாகவோ அல்லது மிக கடுமையான அரசியல் சதுரங்கமாகவோ மாறும் வாய்ப்புகள் தென்படுகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் மூலம் அரசியல் பிரவேசம் செய்துள்ள நிலையில், அவரை எதிர்கொள்ள திராவிட கட்சிகள் பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகின்றன. விஜய்யின் அரசியல் வளர்ச்சியை முளையிலேயே கிள்ளியெறிய நினைக்கும் திராவிட கட்சிகள், அவருக்கு குடும்ப ரீதியான நெருக்கடிகளை கொடுக்க திட்டமிடுவதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஒரு பலமான பேச்சு எழுந்துள்ளது. விஜய் போட்டியிடும் அதே தொகுதியில் அவரது மனைவி சங்கீதாவையே வேட்பாளராக நிறுத்தினால் எப்படியிருக்கும் என்ற விவாதமே இப்போது சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியுள்ளது.
திராவிட கட்சிகளின் இந்த நகர்வு என்பது வெறும் கற்பனையல்ல, அவர்கள் அதிகாரத்தில் இருந்தால் எதையும் செய்ய துணிவார்கள் என்பதே கடந்த கால அரசியல் வரலாறு சொல்லும் பாடம். விஜய் போட்டியிடும் தொகுதியில் அவரது மனைவியையே எதிர் வேட்பாளராக களம் இறக்குவதன் மூலம், விஜய்யின் கவனத்தை சிதறடிக்கவும், அவரை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளவும் முடியும் என அவர்கள் கணக்கு போடுகிறார்கள். சங்கீதாவுக்கும் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக நிலவும் வதந்திகளை பயன்படுத்தி, அவரை தங்களுக்கு சாதகமாக திருப்ப திராவிட கட்சிகள் திரைமறைவில் காய் நகர்த்தக் கூடும். இது நடந்தால், அது விஜய்க்கு பெரும் அரசியல் சவாலாக மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்விலும் மிகப்பெரிய நெருக்கடியாக அமையும்.
இந்த அரசியல் நாடகத்தில் அடுத்த கட்டமாக விஜய்யின் மகன் சஞ்சய்யையும் இதில் இழுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. “மகன் சஞ்சய் தனது தாய்க்கு ஆதரவாகவும், தந்தை விஜய்க்கு எதிராகவும் பிரச்சாரம் செய்வாரா?” என்ற கேள்வி எழுப்பப்படுவதே விஜய்யின் இமேஜை குறைக்க செய்யப்படும் திட்டமிட்ட சதியாகும். ஒரு மகனை தந்தைக்கு எதிராக களம் இறக்குவது என்பது மிக கொடூரமான அரசியல் யுக்தி என்றாலும், வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்ட திராவிட கட்சிகள் இதை செய்யத் தயங்காது என்கிறார்கள் விமர்சகர்கள். குடும்ப உறவுகளுக்குள்ளேயே பிளவை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒரு தலைவரை முடக்குவது என்பது எதிரிகளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
திராவிட கட்சிகளின் பலம் என்பது அவர்கள் கொண்டுள்ள நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் அடிமட்ட தொண்டர் பலம். புதியதாக கட்சி தொடங்கி வரும் விஜய்யை “துண்டை காணோம், துணியை காணோம்” என்று ஓட வைக்க அவர்கள் அனைத்து அஸ்திரங்களையும் ஏவுவார்கள். விஜய்யின் அரசியல் பயணத்தை தொடக்கத்திலேயே முடக்கிவிட்டால், தங்களுக்கு போட்டியாக வேறொரு சக்தியும் வளர முடியாது என்பது அவர்கள் எண்ணம். இதற்காக தனிப்பட்ட விமர்சனங்கள், குடும்ப சண்டைகள் மற்றும் பழைய விவகாரங்களை கிளறி விடுவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட வாய்ப்புள்ளது. விஜய்யை பொறுத்தவரை இது ஒரு அக்னிப்பரீட்சை போன்றது, இதை அவர் எப்படி கையாளப் போகிறார் என்பதே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, திராவிட கட்சிகள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும் வல்லமை படைத்தவை. குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக ஒருவருக்கு எதிரான பிம்பத்தை கட்டமைப்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். விஜய்யின் குடும்ப உறுப்பினர்களை அவருக்கு எதிராக திருப்புவது என்பது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால், அதே வேளையில் இது மக்கள் மத்தியில் விஜய் மீது ஒரு அனுதாப அலையையும் ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், குடும்பத்தையே மேடை ஏற்றி ஒருவருக்கொருவர் பேச வைக்கும் அளவிற்கு அரசியல் தரம் தாழ்ந்து போவது தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமற்ற சூழலையே உருவாக்கும் என நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர்.
மொத்தத்தில் விஜய் இந்த தடைகளைத் தாண்டி எப்படி தனது கட்சியை கொண்டு செல்ல போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. திராவிட பாரம்பரியம் கொண்ட கட்சிகளை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அவர்கள் தங்களின் கோட்டையை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். சங்கீதா அல்லது சஞ்சய் போன்ற குடும்ப உறுப்பினர்களை அரசியல் பகடைக்காய்களாக மாற்றுவது என்பது அரசியல் தர்மத்திற்கு புறம்பானது என்றாலும், தேர்தல் களத்தில் தர்மத்திற்கு இடமில்லை என்பதே எதார்த்தம். விஜய் இந்த சூழ்ச்சிகளை முறியடித்து தனது அரசியல் இலக்கை எட்டுவாரா அல்லது திராவிட கட்சிகளின் வியூகத்தில் சிக்கி திணறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.