பிகரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். 13 வயதில் ஐபிஎல் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இவரை எடுப்பதற்கு அணிகள் கடும் போட்டிகள் போட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்தது.
ஒரு இளம் வீரர் இவ்வளவு பெரிய தொகைக்கு போனது இதுவே முதல் முறை. ஐபிஎல் போட்டியே 2008 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது ஆனால் சூரிய வன்ஷி பிறந்த வருடம் 2011. இதுவரை 2008க்கு பின்னர் பிறந்து ஒருவர் ஐபிஎல் விளையாடுவது இதனை முதல் முறை. ஐபிஎல் விளையாடவதற்கு முன்பே பல சாதனை செய்துதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார்.
ஏப்ரல் மாதம் ஜெய்ப்பூரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவும் அவரை திருப்பி பார்த்தது. இளம் வயதிலேயே இப்படி ஒரு சாதனையை யாரும் செய்திருக்க மாட்டார்கள். தனது அபாரமான ஃபார்மால் எதிரணியை துவம்சம் செய்து வளர்ந்து வரும் இளம் வீரர் என்ற பட்டத்தை வாங்கினார்.
இவரின் ஃபார்மை கவனத்தில் கொண்டு இந்திய அணி அண்டர் 19 டெஸ்ட் தொடரில் இவரை களம் இறக்க உள்ளது. இந்நிலையில் இதற்கெல்லாம் காரணம் ஐபிஎல் தான் என்று வைபவ் சூர்யவன்ஷி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ”அடுத்த சீசனில் அணிக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அதிகமாக கற்றுள்ளேன். தவறு செய்த இடங்களை எல்லாம் திருத்திக் கொண்டு இன்னும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் இந்த சீசனில் விளையாடியதை விட 2 மடங்கு கூடுதலாக அடுத்த சீசனில் விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.