இந்திய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய 3 தலைவர்கள்.. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்.. தமிழகத்தில் விஜய்.. பீகாரில் பிரசாந்த் கிஷோர்.. மூவரின் வெற்றிக்கு காரணம் ஜென் சி என்னும் இளைஞர்கள் வாக்குகள்.. மாநில தேர்தல், இடைத்தேர்தல் என்பதையெல்லாம் தாண்டி 2029 தேர்தலுக்கு இதுதான் அஸ்திவாரம்.. இந்த மும்மூர்த்திகள் ஒன்றுசேர்ந்தால் மத்தியில் பாஜகவின் கோட்டையை அசைத்து பார்க்க முடியும்.. சரியான திட்டமிடல், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தல், ஜென் சி இளைஞர்களை சரியாக பயன்படுத்தினால் மோடி ஒன்றும் வீழ்த்த முடியாத தலைவர் அல்ல.. எதிர்பார்த்தது நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்…
இந்திய அரசியலின் போக்கை உற்றுநோக்கினால், பாரம்பரியமான அரசியல் சமன்பாடுகளைத் தகர்த்தெறிந்து புதியதொரு அலையை உருவாக்கிய மூன்று முக்கிய தலைவர்கள் தனித்து நிற்கிறார்கள். டெல்லியில் எவ்விதப் பின்னணியும் இன்றி