வாழ்க்கைங்கிறது ஒரு வட்டம். அதுல ஜெயிக்கிறதும் தோக்குறதும் ஒன்னுதான். ஆனா, அந்த வட்டத்துக்குள்ள நாம என்ன கனவோட இருக்கோம்ங்கிறதுதான் முக்கியம். இந்த ஆட்சி மூணு மாசத்துல கவிழ்ந்திடும், ஆறு மாசத்துல விழுந்திடும்னு பின்கதவு வழியா ஜோசியம் பாத்துட்டு இருக்கீங்களா பாஸ்? தமிழ்நாட்டுல இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஒன்றே முக்கால் கோடி ஜனங்க ஓட்டு போட்டு கெத்தா உக்கார வச்சிருக்காங்க இந்த விஜய்யை! மக்கள் கொடுத்த தீர்ப்பு இது… ஒரு சின்ன காரணத்துக்காகவோ, உங்க சதி திட்டத்துக்காகவோ இந்த தவெக கோட்டை சரிஞ்சிடும்னு யாரும் கனவு கூட காண வேணாம். தொட்டா ரிப்பீட்டு! கம்யூனிஸ்ட் கட்சியே சொல்லிருச்சு, இந்த ஆட்சி 5 வருஷம் நீடிக்கும்ன்னு…
தமிழக அரசியல் களம் தற்போது தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அதிரடி பிரகடனங்களால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு வழங்கியுள்ள