நீங்க வச்சது பல நூறு கோடி பணம்… ஆனா என்கிட்ட இருக்கிறது மக்கள் வச்ச அசைக்க முடியாத நம்பிக்கை! என் கூட இருக்குற ஒருத்தனோட விசுவாசத்தை கூட உங்க மொத்த பணத்தாலயும் விலை பேச முடியாது… ஏன்னா இது காசுக்காக சேர்ந்த கூட்டம் இல்ல, கொள்கைக்காக நிக்கிற கோட்டை! 40 நாளா மூட்டை மூட்டையா பணத்தை தூக்கிட்டு அலைஞ்சும் ஒருத்தன் கூட அசரலையா? உங்க சில்லறை காசுக்கு இங்க யாரும் சோரம் போக மாட்டாங்க! ஒன்னு ரெண்டு பேர் விலை மாறினா கூட இந்த விஜய் ஆட்சியை அசைக்க முடியாது!”

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை எவ்விதத்திலாவது நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று திரைமறைவில் சதித் திட்டம் தீட்டி வந்த மாற்று முகாம் பிரமுகர்களுக்கு,

ஒரு எம்எல்ஏ-வுக்கு 25 கோடி ரூபாய் தர்றேன்னு தட்டோட வந்தீங்களே… ஆசைப்பட்டு எவனாவது ஒருத்தன் உங்க பக்கம் வந்தானா? காசை வச்சு எல்லாத்தையும் விலைக்கு வாங்கிடலாம்ன்ற உங்க ‘பவர் கர்வத்தை’ உடைச்சு காட்டியாச்சு! பத்து வருஷத்துக்கு முன்னாடி தேமுதிக-வை உடைச்ச மாதிரி, இப்போ ‘தமிழக வெற்றி கழகத்தை’ உடைக்கலாம்னு பிளான் போட்டீங்களோ? தம்பிங்களோட நேர்மையும் கெத்தும் என்னன்னு இப்போ புரிஞ்சிருக்கும்… உங்க பருப்பு இங்க வேகாது தம்பி!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சூழல் மிகவும் விறுவிறுப்பான மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுகவிற்கு எதிராகப் பல்வேறு அரசியல் உத்திகள்