காசு கொடுத்தா மக்கள் ஓட்டு போட்டுருவாங்கன்னு கணக்கு போட்டிங்களே… இப்போ உங்க கணக்கெல்லாம் தவிடுபொடி ஆயிடுச்சா? இனிமே தமிழ்நாட்டுல ஜெயிக்கணும்னா பெட்டியை திறக்கக் கூடாது… மக்கள் மனசை திறக்கனும்.. தேர்தல்ல ஜெயிக்கிறதுக்கு எந்த தந்திரமும் தேவையில்லை.. யாரோடயும் சமரசம் ஆகக்கூடாது… அமைதியா வந்து மக்கள் மனசுல நின்னா போதும்.. மக்கள் அதற்கான பரிசை கொடுப்பாங்க..
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் தேர்தல் என்றாலே பண பலமும், வாக்குக்கு காசு கொடுக்கும் கலாச்சாரமும் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறிவிட்டன என்ற பொதுவான பிம்பம் நீண்ட காலமாக