AI Agent: AI வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது பல நிறுவனங்கள் “AI ஏஜென்ட்கள்” உருவாக்கி வேலையை சுலபமாக்க்கி வருகின்றன. இவை மனிதர்களின் வேலைகளை தானாகச் செய்யும் திறன் கொண்டவை. ஆனால், இதே தொழில்நுட்பத்தை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.
எப்படி ஹேக்கிங் அபாயம் உருவாகிறது?
AI ஏஜென்ட்கள் இணையதளங்களை லாகின் செய்து, பயன்படுத்த முடியும். மெசேஜ் அனுப்பவும் முடியும். இதனால் ஹேக்கர்கள் அந்த ஏஜென்ட்களை கட்டுப்படுத்தி, யூசர் தகவலை திருடுவதோ, கணினி அமைப்புகளில் நுழைவதோ செயல்களைச் செய்ய முடியும்.
நிபுணர்களின் எச்சரிக்கை
- ஏ.ஐ. ஏஜென்ட்கள் பயன்படுத்தும் நிறுவனங்கள் கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்ய வேண்டும்.
- ஏஜென்ட்கள் இணையத்தில் அணுகும் தகவல்கள் நம்பகமானவைதானா என அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.
- யூசர்கள் கூட அனுமதியில்லா பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்களுக்கும் அபாயம்
இந்த அபாயம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல. பொதுமக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் போன்றவையும் பாதிக்கப்படலாம். அதனால், ஏ.ஐ. பாதுகாப்பு மிக முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.