இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனம் பாரதி ஏர்டெல். பயனர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய பயனர்களை ஈர்க்கவும் அடிக்கடி தனது ரீசார்ஜ் திட்ட பலன்களை மாற்றுவதும், புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவிப்பதும் என தொடர்ச்சியாக ஏதேனும் செய்து வருகிறது. மிகுந்த போட்டி நிறைந்த டெலிகாம் சந்தையில் நிறுவனங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது இயல்பான காரியம் தான்.
அந்த வரிசையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களுடன் அமேசான் பிரைம் லைட் ஓடிடி தளத்திற்கான சந்தாவை வழங்குகிறது. தற்போது ஏர்டெல் நிறுவனம் இரண்டு பிரீபெயிட் திட்டங்களுடன் அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கி வருகிறது. எனினும், இவை தற்போது சற்றே அதிக விலையில் கிடைக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே சலுகைகளின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமேசான் பிரைம் லைட் சேவைக்கான சந்தா கட்டணம் ஒரு ஆண்டுக்கு ரூ. 799 ஆகும். மூன்று மாதங்களுக்கு ரூ. 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஏர்டெல் நிறுவனம் தனது இரண்டு பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களில் அமேசான் பிரைம் லைட் சேவைக்கான மூன்று மாத சந்தா வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் ரூ. 599 சேமிக்க முடியும்.
ஏர்டெல் ரூ. 838 பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதில் பயனர்களுக்கு 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது.
இதே போல் ஏர்டெல் ரூ. 1199 பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தில் அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த பிரீபெயிட் ரீசார்ஜ் திட்ட வேலிடிட்டி 84 நாட்களுக்கானது ஆகும். இதில் பயனர்களுக்கு 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது.
இந்த இரு ரீசார்ஜ் திட்டங்களிலும் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் லைட் சேவையின் கீழ் பயனர்கள் அமேசான் செயலி மற்றும் தளங்களுக்கான சேவையை பெற முடியும்.. அதன்படி அமேசான் பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக் மற்றும் பலவற்றை பயன்படுத்தலாம்.