ஆப்பிள் நிறுவனம், தனது ஐம்பதாவது ஆண்டில் 2026-ல் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் செப்டம்பரில் புதிய தயாரிப்புகள், அப்டேட்டுகளை வெளியிடுவது வழக்கம். அதுவும் குறிப்பாக ஐபோனின் லேட்டஸ்ட் வெர்ஷன் போன்களை வாங்க உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களிடையே பெரும் போட்டியே நடக்கும். அந்த வகையில் சமீபத்தில் ஐபோன் 17 அறிமுகமானது.
தனது ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஐபோன் 17 சீரிஸில் Iphone 17e போனை 2026 தொடக்கத்தில் அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டிருக்கிறது. அதேபோல், எம்5 சிப்புடன் கூடிய மேக்புர் ஏர் லேப்டாப், எம்4 மற்றும் ஏ18 சிப்களோடு கூடிய புதிய ஐபாட்கள், ஸ்மார் ஹோம் டிஸ்பிளே மற்றும் siri அப்டேட்டுகள் என வரிசையாக ஆப்பிள் அறிமுகப்படுத்த இருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், 2026-ம் ஆண்டு ஸ்பெஷலான ஆண்டாகக் கொண்டாட நினைக்கிறது ஆப்பிள். இதற்கான ஸ்பெஷல் திட்டமிடலோடு ஏஐ தொழில்நுட்பத்தில் அப்டேட், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான திட்டமிடலோடு, அந்த ஆண்டில் வெளியாகும் ஐபோன் 18-க்கும் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறதாம் ஆப்பிள்.