Apple: அமெரிக்க டெக் நிறுவனம் ஆப்பிள் (Apple), தங்களின் அடுத்த தலைமுறை iPhone Air மாடலை வெளியிடும் திட்டத்தை தற்காலிகமாக தாமதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாடல் முதலில் 2026 மே மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போது அது 2026 வெளியிடவே வாய்ப்பு இல்ல எனக் கூறப்படுகிறது.
தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே இந்த தாமதம் எனக் கூறப்படுகிறது. மேலும், iPhone Air மாடலில் மெல்லிய வடிவமைப்புடன் (ultra-thin design) மற்றும் திரை தொழில்நுட்பத்தை (display technology) பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த தொழில்நுட்பம் தற்போது முழுமையாக தயாராகவில்லை என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் இப்போது தங்கள் முழு தயாரிப்பு வரிசையிலும் (product lineup) மாற்றங்களை செய்யும் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் iPad Air, MacBook Air போன்ற மாடல்களுக்கும் புதிய வடிவமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் சேர்க்கப்பட உள்ளன. எனவே, அடுத்த தலைமுறை iPhone Air வெளியீடு அடுத்தாண்டு முடியாது என்று தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.