நீ உயிரோட இருக்கியா? சீனாவின் இந்த App ஏன் Viral ஆகுது?

சீனாவில் ஒரு வித்தியாசமான mobile app இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த appன் பெயர் தான் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. “Are You Dead?”.பெயர் சற்று shockஆ இருந்தாலும், இதன் நோக்கம் ரொம்ப simple தான். தனியாக வாழும் மக்களின் பாதுகாப்பே.

இந்த app எப்படி வேலை செய்கிறதுன்னா, இதில் register ஆன user இரண்டு நாட்களுக்கு ஒருமுறை appஐ open செய்து ஒரு buttonஐ tap பண்ண வேண்டும். அதாவது “நான் safeஆ இருக்கேன்”ன்னு confirm பண்ணுற மாதிரி. இரண்டு நாட்கள் அந்த check in செய்யலைன்னா, user முன்னாடியே set பண்ணிய emergency contactக்கு alert message போயிடும்.

சீனாவில் single living அதிகரித்திருப்பதால், especially தனியாக வேலைக்காக வாழும் இளைஞர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு இந்த app ஒரு safety toolஆ பார்க்கப்படுகிறது. Health emergency, accident, sudden problem வந்தால், யாருக்கும் தெரியாம போகக் கூடாது என்பதற்காக இந்த idea உருவாக்கப்பட்டிருக்கிறது.

Appன் பெயர் குறித்து social mediaவில் கலவையான reactions வந்துள்ளது. சிலர் “ரொம்ப dark name”ன்னு சொன்னாலும், பலர் “idea நல்லது” என்று பாராட்டுகிறார்கள். இந்த app வேகமாக download ஆகி, paid apps பட்டியலிலும் முன்னணி இடத்தினை பிடித்துள்ளது.

Technology இப்போ entertainmentக்கு மட்டும் இல்லாமல், real life safety problemsக்கும் solution கொடுக்க ஆரம்பிச்சிருக்கு என்பதற்கு இந்த app ஒரு பெஸ்ட் example.

Leave a Comment