பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் வெளியான புதிய லேப்டாப்.. என்ன மாடல்..?

ஆசஸ் நிறுவனம் இந்திய சந்தயை குறி வைத்து புதிய என்ட்ரி லெவல் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இதன் பயன்பாடு இருக்கும். குறிப்பாக அவர்களை குறி வைத்துதான் இந்த லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

asus new chromebook லேப்டாப் சிறப்பம்சங்கள் :
இதில் 14 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே உள்ளது மற்றும் டிஎன்(tn) அல்லது விஐபிஎஸ்(vips) பேனல் விருப்பங்கள் இடம் பெற்றுள்ளது. ஆன்டி க்ளேர் பினிஷ். 300 நிட்ஸ் வரை பிரைட்னஸ் லெவல்கள் உள்ளது. மேலும் இதில் யு ஹச் டி கிராபிக்ஸ் உள்ளது இதில் என் 4500 என்ற ப்ராசசர் இடம் பெற்றுள்ளது. இதற்கு சப்போர்ட் செய்யும் விதமாக lpddr4x ram டைப் இருக்கிறது.

asus
asus

இதில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வேரியண்ட்களில் இ எம் எம் சி(emmc) ஸ்டோரேஜ் வேரியன்ட்கள் உள்ளது. 100 gb google கிளவுட் ஸ்டோரேஜ் சப்போட்டும் உள்ளது. மேலும் முன்புற கேமராவை மறைக்கும் விதமாக ஷட்டர் இருக்கிறது. சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற வீடியோஸ் ஸ்பீக்கர்கள் உள்ளது. மேலும் மைக்ரோபோன்ஸ் இடம் பெற்றுள்ளது. ஃபுல் ஹெச்டி வெப்கேம் இருக்கிறது.

வைஃபை 6.6, ப்ளூடூத் 5.4, usb டைப் சி, யு எஸ் பி அண்ட் லாக் டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் உள்ளது. மேலும் இதில் 42 வாட் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதன் பாடி பேனல் உறுதி அமைப்பை பொருத்தவரை அமெரிக்க ராணுவ தர நீட்டிப்பு சான்றிதழ் உடன் வருகிறது. மேலும் இதில் மாட் பினிஷ் தேய்மானத்தை குறைக்கிறது.

இது 1. 39 கிலோ எடை கொண்டதாக உள்ளது. கையில் எடுத்துக் கொண்டு போகும்போது கிரிப் இருப்பதற்காக இதன் மேற்பரப்பு கரடு முரடான கட்டமைப்புடன் இருக்கிறது. இதனால் கீழே நழுவி விழுவதற்கான வாய்ப்பு குறைவு. இதன் விலை பொருத்தவரையில் பிளிப்கார்ட் தளத்தில் 18,990 ரூபாயாக உள்ளது.

Leave a Comment