விலை ரூ. 2,299 மட்டுமே… 20,000mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி… வேற லெவல் அறிவிப்பு

அமேசான் வலைதளத்தில் 2025 பிரைம் டேஸ் சேல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பல்வேறு சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள், தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. இந்த வரிசையில், சிறப்பு விற்பனை துவங்கும் முன்பே பெல்கின் பிரான்டு தனது பவர் பேங்க் மாடலுக்கு சூப்பர் சலுகை அறிவித்து இருக்கிறது.

அதன்படி பெல்கின் 20,000mAh பவர் பேங்க் மாடல் தற்போது அமேசான் வலைதளத்தில் ரூ. 2,299 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. உண்மையில் இந்த பவர் பேங்க் விலை ரூ. 3,200 ஆகும். குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகை ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

பெல்கின் 20,000mAh பேட்டரி கொண்ட பவர் பேங்க் மாடல் ஐபோன் 16, ஐபோன் 15 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை 3 முதல் 4 முறை வரை சார்ஜ் செய்ய முடியும். நீண்ட தூர பயணங்களின் போது இந்த பவர் பேங்க் உங்களது சாதனங்களுக்கு தேவையான மின்திறன் கிடைப்பதை உறுதிப்படுத்தும்.

இந்த பவர் பேங்க் மாடலில் ஒரு யுஎஸ்பி டைப் சி, இரண்டு யுஎஸ்பி டைப் ஏ போர்ட்கள் என மூன்று போர்ட்கள் உள்ளன. இத்துடன் இந்த மாடல் PD சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த பவர் பேங்க் அதிகபட்சம் 15 வாட் வேகத்தில் சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டுள்ளது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை சார்ஜ் செய்ய முடியும். இதை கொண்டு ஒரே சமயத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.

சார்ஜிங் குறித்த விவரங்களை வழங்குவதற்காக இந்த பவர் பேங்க் மாடலில் எல்இடி இன்டிகேட்டர்கள் உள்ளன. இவை பேட்டரி அளவு மற்றும் ரீசார்ஜ் தகவல்களை தெரிவிக்கும். இந்த பவர் பேங்க் உடன் யுஎஸ்பி சி டூ யுஎஸ்பி ஏ கேபிள் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கு பெல்கின் இரண்டு ஆண்டுகள் வாரண்டி வழங்குகிறது.

Leave a Comment