அரசு துறையின் கீழ் இயங்கும் டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல். அவ்வப்போது தனது ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்த விசேஷ ரீசார்ஜ் திட்டம் ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை வழங்கப்படும்.
புதிய சலுகையின் விலை ரூ. 400 ஆகும். இதில் பயனர்களுக்கு 400 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா சேவை மட்டுமே எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த ரீசார்ஜ் பயனுள்ளதாக இருக்கும். இதில் பயனர்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டி எதுவும் வழங்கப்படாது. இந்தத் திட்டத்தில் பயனர்கள் 1 ஜிபி டேட்டாவை வெறும் ரூ. 1-க்கு பெற முடியும்.
இந்தியாவில் 90,000 4ஜி டவுர்களை விரிவுப்படுத்தும் பணிளில் பிஎஸ்என்எல் நெருங்கி வரும் நிலையில் இந்த ரீசார்ஜ் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரீசாஜ் பெறுவதற்கு பயர்கள் பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப் அல்லது அதிகாரப்பூர்வ வலைதளம் பயன்படுத்தலாம். இதுதவிர பிஎஸ்என்எல் நிறுவனம் வேறு எந்த சலுகையும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வழங்கவில்லை.
சமீபத்தில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் தனது 4ஜி சேவையை வழங்க தொடங்கியது. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறது. தற்போதைய சலுகையை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் காலங்களில் மேலும் புதிய சலுகைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவன நெட்வொர்க்குகள் நாடு முழுக்க பல்வேறு பகுதிகளிலும் பரவலாகவும் சீராகவும் விரிவடைந்து வருகின்றன. இது டெலிகாம் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுடன் இருக்கும் போட்டியில் பிஎஸ்என்எல் தன்னை வலுப்படுத்த உதவும்.
4ஜி திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுக்க கூடுதலாக 1 லட்சம் டவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் விரைவில் அமைச்சரவையில் இருந்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்ளவும் உதவும்.