பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது நீண்ட கால ரீசார்ஜ் சலுகையான ரூ. 1,499-க்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ச் செய்யும் போது 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த தள்ளுபடியில் ஒரு சூசகம் மறைக்கப்பட்டுள்ளது. அது என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
தற்போது பி.எஸ்.என்.எல். வழங்கி வரும் ரூ. 1,499 ரீசார்ஜ் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த ரீசார்ஜ் செய்வோர் 24 ஜிபி டேட்டா பெற முடியும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. தற்போது பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கும் சலுகையின் படி ரூ. 1,499-க்கு ரீசார்ஜ் செய்யும் இந்திய ராணுவ வீரர்களுக்கு 2.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கும் 2.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பயனர்கள் ரூ. 1,499-க்கு ரீசார்ஜ் செய்யும் போது 2.5 சதவீத தொகை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு பங்களிக்கும் வகையில், இந்த அறிவிப்பை பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ளது.
இந்த சலுகை அறிவிப்பின் மூலம் பி.எஸ்.என்.எல். நாட்டிற்கு திருப்பி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தேசத்திற்கு அதிகம் திருப்பிக் கொடுப்பதாக தோன்றாத பட்சத்திலும், இது ஓரளவுக்கு பங்களிப்பை வழங்கும். பி.எஸ்.என்.எல். ரூ. 1499 சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ. 1499 பலன்கள்:
பி.எஸ்.என்.எல். ரூ. 1,499 பிரீபெயிட் ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.