இந்தியாவில் ஏர்டெல்,ஜியோ போன்ற முன்னணி நிறுவனங்கள் 5g நெட்வொர்க் சேவையை மக்களிடம் வழங்கி வருகிறது. வோடபோன் மற்றும் ஐடியா இணைந்து நடத்தும் விஐ நெட்வொர்க்கும் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டும் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்கி வருகிறது. தொடர்ந்து இந்தியா முழுவதும் 5g சேவை வழங்க திட்டமிட்டு வருகிறது. இப்படி அனைத்து நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வந்துவிட்டது.
ஆனால் இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் பிஎஸ்என்எல் நெட்வொர்க் இன்னும் 5ஜி சேவை மொபைல் நெட்வொர்க்கிற்கு கொண்டு வராமல் இருக்கிறது. ஆனால் தற்போது அதற்கான அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இந்தியாவில் இன்டர்நெட் சேவையில் 5g கொண்டு வரப் போவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது மொபைல் நெட்வொர்க்கிற்கு அல்ல.
பிஎஸ்என்எல் 5ஜி எஃப் டபிள்யூ (BSNL 5G-FWA) இந்த நெட்வொர்க்கை பொறுத்தவரை பிஎஸ்என்எல் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் குறைவாக உள்ள இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏரியாக்களில் பைபர் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இன்டர்நெட் பெற சாத்தியமில்லாத இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஹை ஸ்பீட் 5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்துகிறது.
இதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்றால் கஸ்டமர் வீட்டு மாடியில் கஸ்டமர் பிரமிசஸ் எக்யூப்மென்ட் என்ற ஒரு சிபிஇ சாதனத்தை அமைத்து 5ஜி டேட்டா வேகத்தை ஒரு ரவுட்டர் வழியாக வழங்குகிறது. மேலும் இதைப்பற்றி தகவல் அறிய பிஎஸ்என்எல் அதிகாரப்பூர இணையதளத்தை பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய பிஎஸ்என்எல் 5g fwa சேவையானது பிராட்பேண்ட் சேவையை போல இயங்குகிறது.
ஆனால் இதில் கனெக்டிங் ஒயர் ஏதும் இல்லாமல் வயர்லெஸ் டிவைஸ் ஆக வருகிறது. மேலும் ஹை ஸ்பீடு வேகத்தை வழங்குகிறது. எந்த ஒரு சிம் மற்றும் மொபைல் சாதனம் கனெக்டிங் ஒயர்ஸ் இல்லாமல் இந்த சர்வீஸ் நெட்வொர்க்கை பிஎஸ்என்எல் 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.