பிஎஸ்என்எல் Q-5G FWA திட்டம்… விலை மற்றும் பலன்கள் விவரம்

இந்திய டெலிகாம் சந்தையில் நான்காவது பெரிய டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல். சமீபத்தில் இந்தியாவில் Q-5G FWA (பிக்சட் வயர்லெஸ் அக்சஸ்) சேவையை அறிமுகம் செய்தது. இந்திய டெலிகாம் சந்தையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு Q-5G FWA சேவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிஎஸ்என்எல் Q-5G FWA ரீசார்ஜ் திட்டங்களின் விலை மாதம் ரூ. 999 முதல் துவங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Q-5G FWA சேவையில் இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இவை மாதம் ரூ. 999 மற்றும் ரூ. 1,499 என துவங்குகிறது. முதற்கட்டமாக இரு ரீசார்ஜ் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் எதிர்காலத்தில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

ரீசார்ஜ் திட்ட பலன்கள்:

பிஎஸ்என்எல் Q-5G FWA ரூ. 999 ரீசார்ஜ் திட்டத்தில் 100Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ. 1499 ரீசார்ஜ் திட்டம் 300 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. பயனர் பயன்படுத்தும் டேட்டா அளவில் கட்டுப்பாடு விதிக்கப்படும். எனினும், இந்த அளவு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

இந்த சேவைக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த சேவை சிறிய அளவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பயனர் வரவேற்புக்கு ஏற்ப இதன் விரிவாக்கம் இருக்கும் என்று தெரிகிறது. பிஎஸ்என்எல் தனது Q-5G FWA சேவையை வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு முன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment