சீனாவில் இருக்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இப்போ இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டே வருகிறது. அந்த நிறுவனம் 5 ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்த ஊழியர்களுக்கு இலவசமாக flat கொடுத்திருக்கிறது. இந்த செய்தி social mediaல் வேகமாக பரவி, பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
பொதுவாக, நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ், ப்ரோமோஷன் போன்றவை தான் தரும். ஆனால் இங்கு அந்த நிறுவனம் நேரடியாக வீடு கொடுத்திருப்பது தான் எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 5 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் உண்மையாக வேலை செய்ததற்கான நன்றியாக இந்த பரிசு வழங்கப்பட இருக்கிறது.
இந்த வீடுகள் ஊழியர்களின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டு, அதற்கும் தனியாக அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், பல ஊழியர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் வெளியில் வந்ததும், பலர் இதை employee careக்கு சிறந்த உதாரணம் என்று பாராட்டி வருகின்றன. சிலர் இப்படி இந்தியாவில் நடந்தா எப்படி இருக்கும்? என்று பலர் விவாதித்து வருகின்றனர்.
இந்த சீன நிறுவனத்தின் முடிவு, ஊழியர்களை நிறுவனத்தில் நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ள, அவர்களுக்கு நம்பிக்கை, உற்சாகமும் கொடுக்கவும் உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.