latest news
போட்டி செமயா இருக்கே..ரெட்மிக்கு போட்டியாக களமிறங்கும் புதிய மொபைல்..எதுனு தெரிஞ்சிகனுமா?..

ஸ்மார்ட் போன்கள் நமது அன்றாட தேவைகள் அனைத்தையுமே மொபைலில் இருந்து பொஎற்று கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக இதன் கேமாராவிற்கு என்றே தனி ரசிகர்களும் உள்ளனர். எந்த வகை மொபைலாக இருந்தாலும் முதலில் முன்னுரிமை அளிப்பது அதன் கேமராவிற்கே என்று சொன்னால் மிகையாகாது. இந்திய சந்தையில் உள்ள பலவகை போன்கள் மிகசிறந்த கேமரா அம்சத்தினை கொண்டிருக்கும். ரெட்மி, இன்ஃபினிக்ஸ் போன்ற மொபைல்களின் கேமரா தன்மை மிக துல்லியமாக இருக்கும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு போட்டியாக சீன நிறுவனமான ரியல்மீ தற்போது Realme 11 Pro+(5G) என்ற மொபைலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்களை காணலாம்.
சேமிப்பு தன்மை:
Realme 11 pro+ மொபைலானது அதன் சேமிப்பு தன்மையை பொறுத்து இரு வகைகளில் நமக்கு கிடைக்கின்றது. இதன் ஒரு வகை 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டெர்னெல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதன் இன்னொரு வகை 12ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டெர்னெல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
மொபைலின் வண்ணம்:

available in three colours
இந்த மொபைலானது நமக்கு 3 வண்ணங்களில் கிடைக்கின்றது. அவை
- Sunrise Beige
- Oasis Green
- Astral Black Colour
வடிவமைப்பு:
இந்த மொபைலானது நல்ல grip வசதியுடன் நமது கைகளில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் 189 கிராம் எடை இதனை நமது கைகளுக்கு எளிமையான அமைப்பை கொடுக்கிறது.
திரை:

6.7”AMOLED Display
REalme 11 Pro+ மொபைலானது நுனியில் வளைந்த அமைப்புடன் இருக்கிறது. மேலும் 6.7இன்ச் Full HD திரையுடனும் 950nits பிரைட்நெஸ் உடனும் இருப்பதனால் இதனை பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தினை கொடுக்கிறது. இதன் திரை AMOLED யினால் உருவாக்கப்பட்டுள்ளது.
கேமரா:

Realme 11 pro+ camera
Realme 11 Pro+ மொபைலானது 200MP பின்புற கேமராவையும் 8MP அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸையும், 2MP மைக்ரோ சென்ஸாரையும் கொண்டுள்ளது. மேலும் வீடியோ கால்கள், செல்ஃபி எடுப்பதற்கு ஏதுவாக 32MP முன்புற கேமராவையும் கொண்டுள்ளது.
பேட்டரி:

5000 mAh battery support
5000mAh திறனுள்ள பேட்டரி அமைப்பு இதன் சார்ஜினை நீண்ட நேரம் பாதுகாக்கிறது. மேலும் 100W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மையினை கொண்டுள்ளதால் நாம் குறைந்த நேரம் சார்ஜ் போட்டாலே போதுமானது.
விலை:
Realme 11Pro (8GB+256GB)- Rs. 27,999/-
Realme 11Pro (16GB+256GB)- Rs.29,999/-
