latest news
வாவ்!..அட்டகாசமான வசதிகளுடன் வருது Lenovo Tab…இதெல்லாம் விசேஷமா இதுல..

பிரபல டதொழில்நுட்ப நிறுவனமான lenovo தற்போது தங்களின் சொந்த தயாரிப்பான Lenovo M19 5ஜி என்ற டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப் ஆனது 5ஜி தொழில்நுட்பத்தில் இயக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப் நமக்கு கணிசமான விலையிலும் கிடைக்கின்றது என்றுதான் கூற வேண்டும்.

Lenovo M19 5G
விலை:
இதன் குறைந்தபட்ச விலை ரூ. 26,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லட் Abyss Blue என்ற வண்ணத்தில் வெளிவந்துள்ளது.
சேமிப்பு தன்மை(Storage):

Lenovo M19 5G tab
இந்த Lenovo Tab M10 5G நமக்கு இரண்டு வகைகளில் கிடைகின்றது. ஒன்று 4ஜிபி RAM +128ஜிபி இண்டெர்னெல் ஸ்டோரேஜுடனும் மற்றொன்று 6ஜிபி RAM +128ஜிபி இண்டெர்னெல் ஸ்டோரேஜுடனும் கிடைகின்றது. இது தற்போது அமேசான், ஃபிலிப்கார்ட் போன்ற இ-வணிக தளங்களில் நமக்கு கிடைக்கின்றது.
திரை அமைப்பு:
Lenovo Tab M10 5G 10.6இன்ச் LCD திரையுடனும் 1200X1200 துல்லிய தன்மையுடனும் 400nits பிரகாசமான டிஸ்ப்ளேயுடனும் நமக்கு கிடைக்கின்றது. மேலும் இது ஆண்டிராய்டு 13 தொழில்நுட்பத்துடன் Qualcomm Snapdragon 695 chip ப்ராஸசர் வகையில் தயாராகியிருக்கிறது. எனவே இதன் வேகம் அதிகமாக இருக்கும்.
கேமரா:
இதன் பின்புறம் 13MP கேமராவையும் முன்புறமாக 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
பேட்டரி தன்மை:

watch video upto 12 hrs
இதன் பேட்டரி தன்மை மிக அதிகமாவே உள்ளது. இது 7700mAh பேட்டரி திறனுடன் இருப்பதனால் இதன் மூலம் நாம் 12 மணி நேரம் வரையிலும் வீடியோக்களும் 55 மணி நேரம் இசையையும் கேட்க முடியும். இதன் எடையும் குறைவுதான். வெறும் 450 கிராம் என்பதனால் இதனை எங்கு வேண்டுமானாலும் எளிமையாக எடுத்து செல்ல முடியும்.
இதர வசதிகள்:
இந்த Lenovo Tab M10 5G-ல் Dolby Atmos audio, Bluetooth 5.1, USB Type-C மற்றும் 3.5 mm Audio Jack போன்ற இதர வசதிகளும் உள்ளன.
