Likeness detection: யூடியூபின் இந்த முயற்சி deepfake-ஐக் கண்டுபிடிக்க கைகொடுக்குமா?

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது.

Deep fake

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எத்தனையோ ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்யப்பட்டு வந்தாலும், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களைப் போலவே இருக்கும் பொய்யான புகைப்படங்களையும், அவர்கள் பேசாத விஷயங்களைப் பேசியதாக அச்சு அசலாக அவர்களின் குரலிலேயே அவர்களைப் போன்ற உருவத்திலேயே வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வந்தன.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இவை Deep fake என்று அழைக்கப்பட்டன. இந்த Deep fake பிரச்சனை ஏறக்குறைய எல்லா துறைகளிலும் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது. இதைத் தடுக்க முன்னணி டெக் நிறுவனங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

OpenAI, perplexity போன்ற ஏஐ நிறுவனங்களை அடுத்து கூகுளும் அதிரடியாக ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூபில் likeness detection என்ற புதிய அம்சத்தைக் கொண்டுவந்திருக்கிறது கூகுள்.

Likeness detection

தற்போது கூகுள் பாட்னர் புரோகிராமில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வசதி. இதன்மூலம், குறிப்பிட்ட ஒரு தனிநபரின் முகம் அல்லது குரலை அவர்களின் அனுமதியின்றி ஏஐ-யைப் பயன்படுத்தி மாற்றம் செய்யப்பட்டால், அதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியும் என்கிறது கூகுள். 

இந்த வசதியைப் பெற விரும்புவர்கள், அவர்களுக்கு அரசு அளித்திருக்கும் ஏதாவது ஒரு அடையாள அட்டையோடு, தங்களின் செல்ஃபி வீடியோக்களையும் யூடியூபுக்கு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வழக்கமாக காப்பிரைட் பிரச்சனையைக் கையாள்வதைப் போலவே எளிதாக likeness detection வசதியும் பயன்படும் என்று யூடியூப் சொல்கிறது.

Leave a Comment