இன்றைய நவீன கால உலகத்தில் AI மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்ளது. அதிலும் CHATGPT-யை மக்கள் அதிகம் பயன்படுத்தி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். அதன் மூலம் ஈ-மெயில் எழுதவும் அலுவலக வேலைகளை செய்யவும் மருத்துவக் குறிப்புகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இவ்வாறு நம்முடைய தனிப்பட்ட விபரங்களை AI இடம் தெரிவிப்பது தவறானது என்று வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. அதிலும் எவற்றை பகிர வேண்டும் எவற்றை பகிரக்கூடாது என்ற தெளிவு மக்களிடத்தில் வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதன் மூலம் உங்களுடைய டேட்டாக்கள் விற்க வாய்ப்பு உள்ளது. மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதி இவற்றையெல்லாம் பகிர வேண்டாம் என வல்லுனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம்.

தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம் :
மக்கள் பெரும்பாலானவர்கள் CHATGPT செய்யும் மிகப்பெரிய தவறு பெயர் முகவரி போன் நம்பர் மற்றும் இமெயில் போன்ற தனிப்பட்ட விவரங்களை அதனிடம் கூறுவது தான் இந்த தகவல்கள் தவறான கைகளுக்கு சென்றால் இந்த அனைத்து விவரங்களையும் சமூக விரோதிகளால் திருடப்படலாம். ஆகையால் அதன் பின் உங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். அதனால் எப்போதும் தனிப்பட்ட விவரங்களை இதில் பகிர வேண்டாம் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
அக்கவுண்ட் டீடைல்ஸ் வங்கிக் கணக்குகளை பற்றி பகிர வேண்டாம்:
வங்கி கணக்கு எண் UPI ID, ஏடிஎம் கார்டு நம்பர் போன்றவரை கொடுப்பது நேரடியாக வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதற்கு சமம். ஆகையால் இந்த தவறை யாரும் மறந்து கூட செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர்.
பாஸ்வேர்டு மற்றும் ஓடிபி பகிர்வது :
உங்களின் தனிப்பட்ட பாஸ்வேர்ட் மற்றும் ஒடிபி யூசர் நேம், யூசர் லாகின் போன்ற விவரங்களை பகிர வேண்டாம். ஒருவேளை உங்களின் விபரங்கள் ஹேக்கர்களின் கையில் மாட்டிக் கொண்டால் மொத்த டேட்டாவையும் உங்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள் அது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும்.
அலுவலக ரகசியங்களை பகிர வேண்டாம் :
அலுவலக சந்தேகங்கள், அலுவலக விவரங்கள், அலுவலக தேடல்கள் இதை எல்லாவற்றையும் சேர்த்து CHATGPT கவனித்து கொண்டே இருக்கும். பதிவுகளையும் தக்க வைத்துக் கொண்டிருக்கும். அலுவலகங்களுக்கு தெரியாமல் அங்குள்ள தகவலை AI-ஈடம் தெரிவிப்பது அலுவலக கொள்கைக்கு எதிரானது ஆகையால் இதனை கண்டிப்பாக தவிர்க்கவும்.
மருத்துவரிடம் மட்டுமே மருத்துவ ஆலோசனை பெறுங்கள்:
உடல் நலக்குறைபாடுகள், நோய்கள், சிகிச்சைகள் இது தொடர்பான அறிக்கைகள் அல்லது காப்பீட்டு விவரங்களை உடன் பகிர்ந்து கொள்வது சரியல்ல. சில நேரங்களில் தவறான பரிந்துரைகள் உங்கள் உயிருக்கு ஆபத்தை வரவைக்கலாம் இல்லையென்றால் பக்க விளைவுகளை உருவாக்கலாம், அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.