Dating: Facebook வெளியிட்ட Facebook Dating செயலிக்கு, ஆரம்பத்தில் யாரும் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது, இந்தியா உட்பட பல நாடுகளில் இது சர்ப்ரைஸாக ஹிட் அடிக்க தொடங்கி இருக்கிறது.
இளைஞர்கள் அதிகமாக பதிவு செய்ய தொடங்கியதால், இந்த சேவைக்கு மீண்டும் புதிய லைம் லைட் கிடைத்துள்ளது. Facebook பல வருடங்களாகவே ரொம்பவே பாப்புலரான சோஷியல் மீடியாவாக செயல்பட்டு வருகிறது.
அதில், கோடி கணக்கான பயனர்கள் இருப்பதால், தனியாக வேறு dating app download செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. ஒரே Facebook app-லயே dating வசதி இருப்பது, பலருக்கு கூடுதல் சுலபமாக இருப்பதாக கூறப்படுகிறது..
மேலும், Facebook கணக்குகளில் fake profile கம்மி என்பதால் டேட்டிங் profileலிலும் போலி கம்மியாகவே இருக்கும். இதனால் இள வயதினருக்கு பாதுகாப்பான தேர்வாகவே இருக்கும்.
மற்ற dating apps போலவே match செய்யப்படுவது, chat செய்வது போன்ற வசதிகள் எல்லாமே Facebook Datingல் உள்ளது. ஆனால் இது Facebook இருப்பதால், பலருக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கும். இந்தியா உட்பட பல நாட்டின் பயனர்கள் கூறுகிறார்கள்.
Facebookல் சில clear options Privacyக்காக கொடுத்துள்ளது. யூசர்களின் dating profile, அவர்களின் regular facebook profileல் பிரதிபலிக்காது. match ஆக விரும்பாத யூசர்களின் கணக்கை settingsல் மறைக்கலாம். இதனால், பாதுகாப்பு குறித்து யூசர்களுக்கு நிம்மதி உணர்வு இருக்கிறது.
ஆரம்பத்தில் யாரும் பெரிய அளவில் கவனிக்காத Facebook Dating ஆப், இப்போது youngsterக்கு இடையே வேகமாகப் பிரபலமாகி வருகிறது. சுலபம், நம்பிக்கை, மற்றும் Facebook app-லேயே கிடைக்கும் வசதி உள்ளிட்ட மூன்றின் மூலம் Facebook Dating ஒரு fast-growing dating option ஆக்கியுள்ளது.