இந்திய சந்தையில் ஸ்மார்ட் போன்கள் அவ்வப்போது வந்த வண்ணமே உள்ளன. இந்த வரிசையில் தற்போது Infinix Hot 30 மொபைலும் சேர்ந்துள்ளது. இந்த மொபைல் மிக குறைந்த விலையில் மிக அதிக அளவு வசதியினை கொண்டுள்ளது. இந்த மொபைலானது ஜுலை-18 முதல் இந்திய சந்தையில் கிடைகின்றது. இதனை நாம் ஃபிலிப்கார்ட்டில் பெற்று கொள்ளலாம்.

சேமிப்பு தன்மை(Storage):
Infinix Hot 30 மொபைலானது நமக்கு இரு வகைகளில் கிடக்கின்றது. ஒன்று 4ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+128ஜிபி என இரு வகைகளில் நமக்கு கிடைகின்றது. ஸ்டோரேஜ்களின் அடிப்படையில் விலையும் மாறுபடுகிறது.
விலை:
- Infinix Hot 30 4ஜிபி+128ஜிபி: ரூ.12,499
- Infinix Hot 30 8ஜிபி+128ஜிபி: ரூ.13,499
இந்த மொபைலை நாம் ஃபிலிப்கார்ட்டில் பெற்று கொள்ளலாம். ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் கார்டுகளை உபயோகிப்பவர்களுக்கு துவக்க விழா சலுகையாக ரூ.1000 சலுகை அளிக்கப்படுகிறது.
மொபைலின் வண்ணங்கள்:
இந்த மொபைலானது Aurora Blue, Knight Black என்ற இரு வண்ணங்களில் நமக்கு கிடைக்கின்றது.
திரை:
Infinix Hot 30 5G மொபைலானது 580 nits பிரகாசமான 6.7இன்ச் Full HD+ திரையுடனும் 120Hz refresh rate உடனும் நமக்கு கிடைக்கின்றது. இந்த வசதியானது பார்பவர்க்கு மிக சிறந்த அனுபவத்தினை அளிக்கிறது.
ப்ராசஸர்:
Infinix Hot 30 5G மொபைலானது MediaTek 6020 சிப்செட்டையும் Octa-core ப்ராஸசரையும் ஆண்டிராய்டு 13 OS-ஐயும் கொண்டுள்ளது.
கேமரா:

இதன் பின்புறத்தில் 50MP கேமராவும் முன்புறத்தில் 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது. இது நாம் எடுக்கும் போட்டோக்களை துல்லியமாக நமக்கு தருகிறது.
பேட்டரி அமைப்பு:
Infinix Hot 30 5G மொபைலில் 5000mAh பேட்டரி திறனும் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் எடை 215 கிராம் மட்டுமே. இதனால் நமக்கு இதனை கையாளுவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.