ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கோட் விற்பனை துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வரிசையில், நத்திங் போன் 2 மாடலுக்கு வேற லெவல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் ரூ. 44,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் நீண்ட காலமாக ரூ. 33,999 விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இதன் விலை ரூ. 29,999 என பட்டியலிடப்பட்டு உள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனுக்கு வேற எந்த வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.

அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் 2 மாடலில் 6.7 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா, EIS வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரி, 33W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. நத்திங் போன் 2 மாடல் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஓஎஸ் 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் 2 மாடல் 8GB ரேம், 128GB மெமரி, 12GB ரேம், 256GB மெமரி மற்றும் 12GB ரேம், 512GB மெமரி என மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.