இனி இதுதான் பிளாக் ஷீப் ராஜாவா..? விரைவில் அறிமுகமாகும் google பிக்சல் போன்.. என்ன மாடல்..?

இந்த வருடம் ஃபிளாக்க்ஷிப் மாடல் மொபைல் போன்களில் அதிகம் எதிர்பார்ப்பது கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன் தான். தற்பொழுது இந்த மொபைல் பற்றிய லீக்ஸ் இணையதளத்தில் பரவி வருகிறது. அதில் முந்தைய மாடல் விட தற்பொழுது இன்னும் மேம்படுத்தப்பட்டு ஃபியூச்சர்களை அள்ளி வழங்கி இருக்கிறது google. இந்த முறை ஃபிளாக்க்ஷிப் ராஜாவாக பிக்சல் 10 சீரிஸ் இருக்கும் என்று சமூக வலைதள கருத்துக்கணிப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் தற்போது கூகுள் பிக்சல் 10 ப்ரோ மாடலை பற்றிய சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

இதில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே 120ஹச் ரேட்டுடன் வருகிறது. இது 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. டிஸ்ப்ளே பாதுகாப்பு பொருத்தவரை கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடக்ஷனுடன் வருகிறது. பிக்சல் 10 சீரிஸ் மொபைலில் டென்சர் ஜி 5 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது 16 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி முதல் 1 டிபி வரை ஸ்டோரேஜ் வேறியன்ட் உடன் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா அமைப்பை பொறுத்தவரை இதில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 48 எம்பி டெலி போட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்க கேமராவை பொறுத்த வரை 42மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது.‌

பேட்டரி அமைப்பை பொருத்தவரை இந்த பிக்சல் 10 சீரியஸ் மொபைலில் 5000 mah பேட்டரி இருக்கலாம் என்றும் இதனை சார்ஜ் செய்வதற்கு அதிக வாட் கொண்ட சார்ஜரையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான லீக்ஸின் அடிப்படையில் இந்த மொபைல் எதிர்பார்ப்பை ஏகிற வைக்கிறது. google பிக்சல் பொறுத்தவரை கேமராக்கள் அதன் போட்டி மொபைலுடன் ஒப்பிடுகையில் மிகப் பிரமாதமாக இருக்கும். வரும் வாரங்களில் இந்த மொபைல் வெளியாகும் போது இதன் முழு விவரம் மற்றும் விலை பற்றி அறிவிப்பு வெளிவரும்.

Leave a Comment