ஹானர் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் 8000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்போது டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களில் ஹானர் பிராண்டு மேலும் அதிக திறனுள்ள பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேட்டரியை பயன்படுத்த சீனாவின் 3சி ஆணையம் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டதாக தெரிகிறது.
3சி ஆணைய வலைதள விவரங்களில் 8100mAh திறனுள்ள பேட்டரிகள் இடம்பெற்றுள்ளன. இரு பேட்டரிகளும் HB4668A0EIW எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றை ஹானர் பிராண்டும் மற்றொன்றை சுன்வோடா எலெக்டிரானிக்ஸ் நிறுவனமும் உற்பத்தி செய்ய உள்ள. இது லி-அயன் பாலிமர் பேட்டரி ஆகும். இவற்றின் திறன் 30.54Wh என கணக்கிடப்பட்டுள்ளது. இது குறைந்தபட்சம் 3.77v வோல்டேஜ் அதிகபட்சம் 4.53v வோல்டேஜ் கொண்டுள்ளது.
டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்ட முந்தைய தகவல்களில் ஹானர் பிராண்டின் புதிய மேஜிக் V5 மாடல் இதுவரை வெளியான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த சாதனம் 6100mAh பேட்டரி, 8.8mm அளவில் மிகமெல்லிய பாடி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இத்துடன் 8200mAh பேட்டரி கொண்ட மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனையும் ஹானர் பிராண்டு உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். எனினும், இந்த மாடல் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. புதிய ஸ்மார்ட்போன் ஹானர் பவர் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய மாடலாக இருக்குமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பவர் ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் OLED 1.5K 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், 8000mAh பேட்டரி, 66 வாட் பாஸ்ட் சார்ஜிங வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த மேஜிக்ஓஎஸ் கொண்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.