Wi-Fi Passwordஐ எப்படி கண்டுபிடிக்கலாம்…  நச்சுனு சொல்லவா சூப்பர் ஐடியா!

Wi-Fi password மறந்துவிட்டால் routerஐ பாக்க வேண்டிய காலம் இப்போ இல்லை. Android மற்றும் iPhone இரண்டிலுமே, நீங்க ஏற்கனவே connect ஆகி இருந்த Wi-Fi networkல் passwordஐ நேரடியாக phoneல் பார்க்கும் வசதி இப்போது கிடைக்கிறது. இது வீட்டில் guests வந்தப்போ password share பண்ணவும் மிகவும் உதவியாக இருக்கும்.

Android phone யூஸ் பண்ணுபவர்கள், Settingக்கு சென்று Wi-Fi optionஐ open பண்ணி விடலாம். அதில் connect ஆகி இருக்கும் networkஐ tap பண்ணினால் QR code option தெரியும். அந்த QR codeஐ open பண்ணினால், கீழே Wi-Fi passwordஐ பார்க்க முடியும். 

iPhone usersக்கும் இதே மாதிரி வசதி வந்திருக்கிறது. Settings > Wi-Fi-க்கு போய், connect ஆகி இருக்கும் network பக்கத்தில் இருக்கும் “i” iconஐ tap பண்ணினால் password option வரும். Face ID அல்லது Touch ID verify பண்ணின பின்னர், Wi-Fi password screenல் show ஆகும். இதையும் copy அல்லது share செய்ய முடியும்.

இந்த வசதி QR code மூலம் password share பண்ண உதவுவதால், ஒவ்வொரு முறையும் passwordஐ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சிம்பிள்ளா scan பண்ணி Wi-Fiக்கு connect ஆகலாம். இது safeஆவும் fastஆவும் இருக்கும்.

Tech experts சொல்வது என்னவென்றால், இந்த feature ஈசி மட்டுமல்ல, securityக்கும் நல்லது. Public Wi-Fi passwordஐ save பண்ணாமல் இருப்பதும், home Wi-Fi passwordஐ சில காலத்திற்கு ஒருமுறை change பண்ணுவதும் பாதுகாப்புக்கு நல்லது. மொத்தத்தில், Wi-Fi password விஷயத்தில் Android மற்றும் iPhone usersக்கு இந்த update ஒரு பெரிய relief தான்.

Leave a Comment