WhatsApp குழுவிலிருந்து சத்தமில்லாமல் வெளியேறலாம்… புதிய silent exit வசதி!

WhatsApp பயனர்களுக்காக ஒரு useful privacy update வெளியிட்டுள்ளது. இதற்கு பிறகு, எந்த WhatsApp குழுவிலிருந்து வெளியேறினாலும், அந்த groupல உள்ள எல்லாருக்கும் “***** left the group” என்ற announcement போகாது. 

இப்போது குழு adminக்களுக்கே மட்டும் ஒரு notification வரும். மற்ற உறுப்பினர்களுக்கு இந்த exit தெரியவே தெரியாது. இதுவரை WhatsApp group exit ஒரு public announcement மாதிரி இருந்ததால், பலர் groupல் இருந்து வெளியேறவே தயங்கினார்கள். 

தற்போது இந்த silent exit update இந்தப் பிரச்சனையை சரி செய்திருக்கிறது. குழுவை விட்டு வெளியேறும் முடிவை முழுக்க privateஆக வைத்துக்கொள்ள முடியும். இந்த வசதி பயன்படுத்துவது மிகவும் எளிது. 

Group chatல், “Exit Group” என்பதைத் தேர்வு செய்தால் போதும். முன்புபோல பெரிய alert message group chatல் தோன்றாது; admin ஒருவருக்கு மட்டும் தகவல் சொல்லப்படும். நீங்கள் குழுவிலிருந்து வெளியேறிய பிறகு, பழைய messagesஐ பார்க்கலாம், ஆனால் குழுவில் வரும் புதிய chats உங்களுக்கு வராது.

Work groups, family groups, school reunion groups என தேவையில்லாத எதிலிருந்தாலும் “சத்தமில்லாமல்” வெளியேறும் option கிடைத்திருப்பதால், பயனர்கள் இதை ரொம்ப welcome செய்து வருகிறார்கள்.

Leave a Comment