Calls, msgs, photos… எல்லாம் PC-லேயே! இனிமே போன் தேடி அலைய தேவையே இல்ல!

உங்க Android phoneமும் laptopயும் இரண்டு தனி தனியா இருக்குறதா? இனிமேல் இல்ல. Because இப்போது இரண்டையும் ஒரே இடத்தில் connect பண்ணி calls, messages, photos எல்லாத்தையும் ஒரே இடத்தில் handle பண்ண முடியும். 

இதுக்காக இருக்குது Phone Link app. Windowsல் Phone Link app open பண்ணுங்க. அதில், “Android” select பண்ணி, உங்க Microsoft account log in செய்யுங்க. Android phone-ல் “Link to Windows” app install பண்ணுங்க (சில போன்களில் already இருக்கும்). PCல் வரும் QR codeஐ, phoneல scan பண்ணுங்க.

அதில், கால்ஸ், போட்டோஸ், மெசேஜ்கள் எல்லாத்துக்கும் பெர்மிஷன் allow பண்ணிட்டீங்கனா, இப்போ ரெண்டுமே கனெக்ட் ஆகிடும். லேப்டாப்பில் இருந்தே மெசேஜ் அனுப்பலாம், பெறலாம். போனில் இருக்கும் போட்டோவை பார்க்கலாம். 

போனில் வரும் நோட்டிபிகேஷன் எல்லாம் லேப்டாப்பிலே தோன்றும். போனை தேட வேண்டாம். ஆனால், இதற்கும் போனும், லேப்பும் ஒரே Wi-Fi-ல் இருக்கணும். ஆப்களையும், ஓஎஸ் அப்டேட்டா வச்சிக்கோங்க. முக்கியமான பெர்மிஷன்களை கொடுக்கணும்னு மறந்துறாதீங்க.

Leave a Comment