இப்போ எல்லாரும் வீட்டுல smart security cameras வைச்சிருப்போம். ஆனால் இது Wi-Fiல connect ஆகும். அதனால தான் சில நேரம் ஹேக்கர்கள் அதை எளிதா hack பண்ணி வீடியோ பாத்துட முடியும். டென்ஷன் வேண்டாம். இனிமே சில simple steps follow பண்ணினாலே safe தான்!
முதல்ல, வைஃபைக்கு strong password வைங்க. “123456”, “admin”, “password” மாதிரி basics பாஸ்வேர்ட் use பண்ணக்கூடாது. Cameraக்கும், Wi-Fi networkக்கும் ரொம்ப strong, guess பண்ண முடியாத password வக்கிறது முக்கியம்.
அதுக்கு அப்புறம், Two-Factor Authentication (2FA) on செய்வதும் கட்டாயம். இந்த ஒரு setting தான் hackers பிரச்னையாக அமையும். உங்க accountக்குள் நேரடியாக நுழைய முடியாது.
Wi-Fiயையும் strongஆ வைக்கணும். Router password update பண்ணுவதும் முக்கியம். Public guest networkல் camera connect பண்ணவே கூடாது. முடிந்தால் வீட்டில் “main Wi-Fi” மற்றும் “Camera Wi-Fi” என்று இரண்டு networksஆ split பண்ணலாம். இது ரொம்பவே safe.
அடுத்து முக்கியமான விஷயம். camera app updates மற்றும் firmware updates. இது update ஆகுறதெல்லாம் time waste ஆ பார்க்க கூடாது. Hackers entry பண்ணுற loopholeகளை block பண்ணுறதுக்குத்தான் updates. மிஸ் பண்ணக்கூடாது.
வீட்டை விட்டு வெளியில் இருக்கும் நேரத்தில் கேமராவை use பண்ணினாலும் கேர்புல்லா இருக்கணும். தேவையில்லாத நேரம் off பண்ணுங்க. On செய்ய வேண்டியபோது மட்டும் செய்யுங்கள்.
இந்த நாலு tips போதும். Hackerக்கும், உங்க வீட்டுக்குள்ள நுழைய chanceயே கிடையாது.