Google Pay பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துடுச்சு. இப்போது UPI PIN மறந்துவிட்டாலும், அல்லது பாதுகாப்புக்காக மாற்ற வேண்டியிருந்தாலும், debit கார்டு details இல்லாமலே PIN reset செய்யலாம்.
இதுவரை PIN மாற்ற debit card number, expiry date போன்ற தகவல்கள் கட்டாயம் வேண்டுவதாக இருந்தது. தற்போது Google Payல் “Forgot UPI PIN” அல்லது “Reset PIN” என்பதைத் தேர்வு செய்தால், app உங்கள் mobile numberஐ OTP மூலம் verify செய்யும்.
Verification முடிந்ததும், நேரடியாக புதிய PIN அமைக்க முடியும். இதற்கு வேறு card details சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த மாற்றம் குறிப்பாக debit card எடுத்துபோவது மறந்து போனவர்கள், பழைய கார்டு working இல்லாதவர்கள் அல்லது புதிய phoneல் UPI மீண்டும் set செய்ய வேண்டியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
PIN reset process குறைந்த stepsல் முடிவதால், UPI பயன்படுத்துவது இன்னும் easy ஆகி விட்டது. Google Pay இந்திய பயனர்களுக்காக இந்த வசதியை படிப்படியாக கொடுத்து வருகிறது. Banking தொடர்பான பாதுகாப்பை காக்கும் வகையில், frauds தடுக்க OTP verification கட்டாயமாக தொடர்கிறது.
எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், “Debit card கைல இல்லாததுனால UPI PIN மாற்ற முடியல” என்ற பிரச்சனை இனி இல்ல.