Accidentஆ WhatsApp மெசேஜ் Delete ஆகிடுச்சா? இப்போ Restore பண்ண முடியும்!

WhatsApp பயன்படுத்தும்போது சில நேரம் தவறுதலாக முக்கியமான மெசேஜ்கள், போட்டோக்கள் அல்லது வீடியோக்கள் டெலிட் ஆகிடும். அதுக்குப் பிறகு இது மீண்டும் கிடைக்குமா?ன்னு பலருக்கும் சந்தேகமே வரும். டெக் நிபுணர்கள் சொல்லுறது என்னன்னா, இப்போ delete ஆன WhatsApp messagesஐ மீண்டும் restore பண்ணவும் முடியும்.

இந்த recovery முழுக்க முழுக்க backup மேல் தான் depend ஆகுது. Android phone பயன்படுத்துறவர்கள் Google Driveல் backup enable பண்ணி இருந்தாலும், iPhone users iCloud backup வைத்திருந்தாலும், delete ஆன messagesஐ மீண்டும் பெற வாய்ப்பு இருக்கும். 

Backup செய்து இருந்து பின்னர் மெசேஜ் delete செய்யப்பட்டால் மட்டுமே இந்த method வேலை செய்யும். Restore பண்ண WhatsAppஐ uninstall பண்ணி மீண்டும் install செய்யணும். Appஐ open பண்ணும்போது, backup restore optionம் வரும். அதைப் select பண்ணினா, backup எடுத்த நாள்வரை இருந்த messages எல்லாம் மீண்டும் கிடைத்து விடும். இதில் texts மட்டும் இல்லாமல் photos, videos என எல்லாமே restore ஆகும்.

ஆனா experts சொல்ற Delete ஆன messageக்கு பிறகு backup update ஆகி இருந்தால், அந்த message permanently போய்டும். அதனால regularஆ auto backup enable பண்ணி வைத்திருக்கணும். Daily backup option இருந்தாலும், accidental deleteகளுக்கு இது ரொம்பவே helpfulஆ இருக்கும்.

மொத்தத்தில், WhatsApp message delete ஆகி இருந்தால் உடனே panic ஆக வேண்டாம். Backup இருந்தால் restore chanceம் இருக்கு. இல்லன்னா message permanently lost தான். அதனால, chat backupஐ ignore பண்ணாமல் தொடர்ந்து அதை கவனித்து வைப்பதே safest option.

Leave a Comment