WhatsApp-ல் அழைப்பை முன்பே ‘Schedule’ செய்யலாம்! அட செமையா இருக்கே!!

Call Scheduling என்ற புதிய வசதியை WhatsApp இப்போது கொண்டு வந்துள்ளது இதன் மூலம் நண்பர்கள், குடும்பம் அல்லது office குழுவுடன் பேச வேண்டிய நேரத்தை முன்கூட்டியே fix பண்ணிக்கொள்ள முடியும். குறிப்பாக group calls செய்யும்போது எல்லாருக்கும் தகுந்த நேரத்தை கேட்டு அப்போது செய்ய இந்த feature ரொம்ப உதவும்.

இந்த வசதியை பயன்படுத்துவதும் ரொம்ப easy. WhatsAppல் Calls tabக்கு போனாலே, “Schedule Call” என்ற இருக்கும். அதைக் கிளிக் செய்து, யாருடன் call செய்ய போகிறீர்களோ அந்த நபர் அல்லது குழுவை select பண்ணலாம். அதன் பிறகு callக்கு தேதி மற்றும் நேரம் fix பண்ணினால் போதும். 

நீங்கள் set பண்ணியதும் WhatsAppக்கு ஒரு call link உருவாகும். அதை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருக்கு share பண்ணிவிட்டால் போதும். இதை உங்கள் phone calendarலிலும் சேர்க்க முடியும்.

நேரம் வந்ததும், அனைவருக்கும் reminder அனுப்பப்பட்டு விடும். அதனால் “அய்யோ மறந்து போச்சு” என்று சொல்லும் பிரச்சனை இனி இருக்காது. Group meeting-ங்களுக்கும் இது ரொம்பவே உதவும். எல்லாரும் ஒரே நேரத்தில் call join ஆகிவிடுவதால் பிரச்னை இல்லாமல் நன்றாக நடக்கும்.

இந்த feature, தனிப்பட்ட callsலிலும் வேலை செய்யும். Long-distance couples, friends, family எல்லாருக்கும் இது ஒரு வர பிரசாதம் தான். ஒரு சின்ன button press செய்தால் போதும். அவர்களுக்கு அழைத்து நேரத்தை வீணாக்காமல் இருவருக்கும் சரியான நேரத்தில் பேச முடியும். 

அதுமட்டுமல்லாமல் மீட்டிங்கிற்கு இனி கூகுள் மீட்டை மட்டும் நம்ம வேண்டாம். வாட்ஸ் அப்பிலும் calls-ஐ professional-ஆவும், organised-ஆவும் மாற்றும். Work-from-home, online meetings, family catch-up… எதற்கும் இந்த feature super useful! தான். 

Leave a Comment