ஹூவாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய பிட்னஸ் பேண்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் பேண்ட் 10 என அழைக்கப்படும் புதிய பிட்னஸ் பேண்ட் பல்வேறு அதிநவீன அம்சங்களுடன் அதிகபட்சம் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
மிக குறைந்த எடையிலான அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ஹூவாய் பேண்ட் 10 மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் உடல்நலன் சார்ந்த அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் பேண்ட் 10 அம்சங்கள்:
புதிய ஹூவாய் பேண்ட் 10 மாடலில் 1.47 இன்ச் AMOLED 2.5D டச் ஸ்கிரீன், கஸ்டமைஸ் செய்யக்கூடிய விட்ஜெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, இதய துடிப்பை டிராக் செய்யும் திறன், இரத்தத்தில் உள்ள காற்றோட்டத்தை கணக்கிடும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் 100-க்கும் அதிக உடற்பயிற்சி மோட்கள், AI சார்ந்த விசேஷ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 9-ஆக்சிஸ் சென்சார், AI சார்ந்து இயங்கும் முடக்குவாதத்தை கண்டறியும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய ஹூவாய் பேண்ட் 10 மாடல் அல்ட்ரா-லைட் அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிட்னஸ் பேண்ட் மாடல் மேட் பிளாக், வைட், கிரீன், புளூ மற்றும் பர்பில் என பலவித நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரியும், பேட்டரியை 45 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.
விலை விவரங்கள்:
ஹூவாய் பேண்ட் 10 மாடல் மற்றும் பாலிமர் கேஸ் விலை ரூ. 3,999 என்றும் அலுமினியம் அலாய் கேஸ் கொண்ட மாடலின் விலை ரூ. 4,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இரு மாடல்களும் அமேசான் வலைதளத்தில் அறிமுக சலுகையாக ரூ. 3,699 மற்றும் ரூ. 4,199 விலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த சிறப்பு விலை ஜூன் 10-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.