AI வளர்ச்சி அதிகரிக்கும் இந்த காலத்தில், “நாளைக்கு என் வேலை இருக்குமா?” என்ற கேள்வி பலரிடமும் வருகிறது. Chat gpt, ai assistants, ai tools எல்லாம் வந்ததால, சில jobs போகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் எல்லா வேலைகளையும் AI எடுத்துக்கொள்ளாது என்றே நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இதுகுறித்து வல்லுநர்கள் கூறுவது AI செய்யும் வேலைகள் பெரும்பாலும் தொடர் வேலைகள், rule-based, நிறைய டேட்டா கொண்ட டாஸ்குகள் தான். ஆனால் மனிதர்களின் யோசனை, க்ரியேட்டிவ் ஆலோசனை கொண்ட ரியல் டைம் மனிதர்கள் செய்ய தேவைப்படும் வேலைகளை AI எளிதாக replace பண்ண முடியாது.
அதனால் தான் மருத்துவம், ஆசிரியர், psychology, law, management, அறிவுசார் போன்ற துறைகள் இன்னும் “future-proof” ஆக பார்க்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு doctor diagnosisக்கு AI உதவி பண்ணலாம்; ஆனால் patientஐ புரிந்து கொண்டு மருத்துவம் பார்க்க முடியாது. ஆசிரியர் போல புக்கில் இருப்பதை சொல்லி கொடுக்கலாம். ஆனால் மாணவர்களை மோட்டிவேட் செய்ய முடியாது.
மேலும், AI உருவாக்கும் மற்றும் manage பண்ணும் வேலைகளும் அதிகமாக இருக்கிறது. AI trainers, data analysts, cybersecurity experts, product managers போன்ற rolesக்கு demand தொடர்ந்து அதிகரிக்கிறது. அதாவது, AI வேலை எடுத்துக்கொள்ளும் என்பதைவிட, AI உடன் வேலை செய்ய தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு அதிகமாகும்.