இந்தியாவில் விவோ மற்றும் oppo நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு இணையான மொபைலை களம் இறக்கி இந்திய சந்தையை பிடிக்க நீண்ட காலமாக போராடி வருகிறது இன்ஃபினிக்ஸ். தற்போது பட்ஜெட் விலையில் இன்ஃபினிக்ஸ் ,infinix Note 50s 5G+மொபைலில் மேம்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 8 ஜிபி ரேம் கொண்டு 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் கிடைத்தது. தற்போது 8 ஜிபி ரேம் மாடலை அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்தான்.
இதன் விலை 14,999 ரூபாயாக நிர்ணயம் செயலகப்பட்டுள்ளது. இந்த விலையில் வருகிற ஜூன் 23ஆம் தேதி முதல் இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை கடைகளில் இந்த மொபைல் கிடைக்கும்.

infinix Note 50s 5G+ சிறப்பம்சங்கள் :
இந்த மொபைலில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் கர்வ் அமோலெட் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இது 144 ஹெச் ரெப்ரஸ் ரேட்டுடன் மற்றும் 1300 பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த மொபைலின் பிராசஸரை பொருத்தவரை மீடியா டெக் டைமண்ட் சிட்டி 7,300 என்ற மிட் ரேஞ்ச் ப்ராசசர் உள்ளது.
மேலும் இதில் 5500mah கொண்ட பெரிய பேட்டரியும் 45w பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட சார்ஜரும் உள்ளது மேலும் இதில் 64 எம்பி சோனி ஐ எம் எக்ஸ் டூயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற செல்பி கேமராவை பொறுத்தவரை 13 மெகா பிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஏஐ எ ரைசர் ஏஐ பவர் போட்டோகிராபி டூல்ஸ் போன்றவை சிறந்த இமேஜை பெற உதவுகிறது.
இதில் ஆண்ட்ராய்டு 15 os உடன் வருகிறது. இதில் ஐ பி 64 ரேட்டிங்குடன் தூசி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை பெற்றுள்ளது. மேலும் இதில் டூயல் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற முடியும்