ஐபோன் சார்ஜருக்கு சூப்பர் விலை குறைப்பு… உடனே வாங்கலாமா?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 மாடல்களில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளன. எனினும், இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டும் வழங்கப்படவில்லை. ஆனால், ஐபோனை யுஎஸ்பி டைப் சி சார்ஜர் கொண்டே சார்ஜ் ஏற்றிக் கொள்வது நல்ல ஆப்ஷனாக தோன்றுகிறது இவ்வாறு செய்வதற்கு ஒரிஜினல் சார்ஜர் வாங்க திட்டமிடுவோர் அதனை தற்போது நல்ல விலையில் வாங்கிட முடியும்.

இந்தியாவில் ஆப்பிள் 20 வாட் யுஎஸ்பி டைப் சி சார்ஜர் தற்போது ரூ. 1589 விலையிலேயே பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வாங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது தள்ளுபடி, மேலும், இதன் விலையை குறைக்க முடியும். சார்ஜரை நேரடியாக உங்கள் வீட்டிற்கும் டெலிவரி பெற முடியும். உண்மையில் இந்த சார்ஜரின் இந்திய விலை ரூ. 1900 ஆகும்.

இந்த சார்ஜர் மற்ற ஐபோன் மாடல்களிலும் பயன்படுத்தலாம். ஐபோன் 12 சீரிஸ் தொடங்கி அதன் பிறகு வெளியிடப்பட்ட அனைத்து வகை ஐபோன் மாடல்களுடன் இந்த சார்ஜரை பயன்படுத்த முடியும். இது மட்டுமின்றி பயனர்கள் இதை கொண்டு ஐபேட் மற்றும் ஏர்பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்களையும் இந்த சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய முடியும். ஐபோன் 12 சீரிஸ் தொடங்கி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுடன் சார்ஜர் வழங்கும் வழக்கத்தை நிறுத்திவிட்டது.

இதனால் பயனர்கள் ஐபோனுடன் அதற்கான சார்ஜரை தனியாக வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதற்கு முன்பு வரை ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் இலவசமாகவே கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது இதன் விலை ரூ. 1600-இல் வந்து நிற்கிறது.

உங்களிடம் டைப் சி சார்ஜர் இருந்தால், அதை கொண்டே ஐபோன் 15 அல்லது ஐபோன் 16 மாடல்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கென தனி சார்ஜர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இதை கொண்டு ஏர்பாட்ஸ், ஐபேட் உள்ளிட்ட சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Leave a Comment