tech news
6000mAh பேட்டரி, வேற லெவல் டிசைன் – அடுத்த வாரம் வெளியாகும் புது ஐகூ ஸ்மார்ட்போன்

இந்திய சந்தையில் குறைந்த விலையில் அதீத அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து புகழ் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக ஐகூ விளங்குகிறது. இந்நிறுவனம் தனது புதிய Z10 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் டிசைன் என புது ஸ்மார்ட்போனின் பல்வேறு விவரங்களை ஐகூ தெரிவித்துள்ளது.
அதன்படி புதிய ஐகூ Z10 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வருகிற 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என ஐகூ டீசர் மூலம் தெரிவித்துள்ளது. இந்த பிரிவில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று ஐகூ தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலையும் கணிசமான அளவு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,000-க்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
தோற்றத்தை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா சென்சார்களுடன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் மேல்புறத்தில் ஸ்பீக்கர் கிரில், வலது புறம் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வழங்கப்படுகிறது.
கேமராவை பொருத்தவரை ஐகூ Z10 மற்றும் Z10x மாடல்களில் 50MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய லைட் எடிஷன் மாடலிலும் இதே சென்சார்கள் வழங்கப்படலாம். இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
முன்னதாக ஐகூ Z10x 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 13,499 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதோடு ஐகூ Z10 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதை பார்க்கும் போது புதிய ஐகூ Z10 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்ற இரு மாடல்களை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
