ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Apple Siri – Google Gemini
உலக அளவில் டெக் நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டாம் ஆப்பிளும் கூகுளும் முக்கியமானவை. பல தயாரிப்புகளில் இவை நேருக்கு நேர் மோதிக்கொண்ட தருணங்களும் உண்டு. ஸ்மார்ட்போன் சந்தையை எடுத்துக் கொண்டால் ஆப்பிளின் ஐஓஎஸ்-ன் மிகப்பெரிய போட்டியாளர் கூகுளின் ஆண்ட்ராய்டு தான்.
எண்ணிக்கை அடிப்படையில் ஆண்ட்ராய்டு போன்கள் அதிகம் என்றாலும், ஐஓஎஸ்-இன் அப்டேட்டுகளோடு போட்டிப் போட்டுக் கொள்வது வழக்கம். இந்தநிலையில், ஆச்சர்யமாக இரு நிறுவனங்களும் கைகோர்க்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இந்த இரண்டு நிறுவனங்களையும் கைகோர்க்க வைத்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம், 2026-ல் தனது ஐம்பதாவது ஆண்டைக் கொண்டாட இருக்கிறது. அதையொட்டு பல்வேறு அப்டேட்டுகள், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.
அதன் ஒருபகுதியாகத் தனது ஏஐ தொழில்நுட்பமான Siri-ஐ மேம்படுத்தி, பல்வேறு அப்டேட்டுகளை கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள். இதற்காக Google-ன் ஏஇ தொழில்நுட்பமான Gemini-யின் உதவியை அந்த நிறுவனம் நாடியிருப்பதாகத் தகவல்கள் சிறகடிக்கின்றன.
ஒருவேளை இது சாத்தியமானால் Apple-ன் Siri-யின் மூளையாக Google-ன் Gemini ஏஐ செயல்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த அப்டேட் 2026 மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கிசுகிசுக்கிறார்கள் டெக் துறை வல்லுநர்கள். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!